25. 09. 1947ல் பிறந்த கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர் நம்பிராஜன். தென்காசியில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. PUC படித்த இவர், மளிகைக்கடைப் பையன் முதல் சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன், தளபதி ஆகிய பத்திரிகைகள் என பல்வேறு பணிகளைப் புரிந்திருக்கிறார். எனினும் இவர் முழுநேர எழுத்தாளராகவே தம்மை எப்பொதும் உணர்ந்திருக்கிறார். திருநெல்வேலிக்காரரான விக்ரமாதித்யன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரையிலும் பதினைந்து நூற்கள் வெளியாகியுள்ளன. இவர் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்தகாலத்தில் பத்திரிகையாளரும்கூட.