தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது...
ப. சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடிவரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்துகொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
புயலிலே ஒரு தோணி ஒரு மகத்தான படைப்பு. நம் மொழியின் நவீனப் பொக்கிஷம்.