கோயிலின் முன்பு உடைபடுகிற தேங்காய் சில்லுகளில் எத்தனையோ நம்பிக்கைகள், பிரார்த்தனைகள், சிக்கல்கள் பொதிந்து கிடக்கின்றன. அதைப்போலவே கல்யாண்ஜி கவிதைகளில் தோன்றும் காட்சிகள் வெறும் காட்சிகள் மட்டுமே அல்ல. கவிதைகளைக் கட்டுடைத்தால் காட்சிகள் உடைபடும்; மனிதம் வெளிப்படும். இதமான சொற்களின் உள்ளுறை வெப்பம் நம் வாழ்க்கையின் தகிப்பை, நெகிழ்வை நமக்கு வெளிப்படுத்தும். மனம் விகாசம் பெரும். இன்றைய நம் வாழ்க்கையில் யாரும் ‘சும்மா வருவதில்லை.’ எனவேதான் சும்மா வருகிறவர்கள்தான் எனக்கு முக்கியம் என்கிறார் கல்யாண்ஜி. வாழ்க்கை சக்கரங்களில் நாளையைப் பற்றிய கனவுகளோடு மாத்திரமே ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு தவறவிட்ட நினைவுகளையும் மனிதர்களையும் மீட்டெடுத்துக் கவனப்படுத்துகின்றன இக்கவிதைகள்.