அடிப்படையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தமிழ்ச் சினிமா ரசிகர் அல்ல. ஆனால் அக்கால தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய சினிமா கலைஞர்கள் அவரது ரசிகராக - வாசகராக இருந்தனர் என்பது நிதர்சனம்.
அவரது சினிமா பார்வை தீர்க்கமானது, பூடகம் இல்லாதது. அதனை திரையுலகில் காட்டி முதல் தமிழ்ச் சினிமா ஜனாதிபதி விருதினை பெற்றதோடு இவரது சினிமா முயற்சி நின்று போனது. தமிழ்த் திரை உலகுக்கு நேர்ந்த வீழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.
அவர் சினிமாவை பார்த்த பார்வை, அதில் கண்டும் கற்கவும் அக்கால திரைப்படங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின. சுதந்திரத்திற்கு முன்பும் - பின்பும் சினிமா வளர்ச்சி - வீழ்ச்சியைத் தமிழ்த் திரை உலகம் நடைபோடுவது கண்டு தன்னுடைய கருத்துகளை பட்டவர்த்தன