பால் ஹெய்ஸேயினுடைய சிறந்த கதை இதுதான் என்பது பற்றி அபிப்பிராய பேதத்திற்கு இடமே கிடையாது. மேல் நாட்டவர்களின் காதல் கதைகளிலே சிறந்ததொன்றாக இது போற்றப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் 'ரோமியோவும் ஜூலியட்டும்' என்னும் நாடகத்துடன் இக்கதை பல விமர்சகர்களால் ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதை எழுதும்போது பால் ஹெய்ஸேக்கு வயது இருபத்து மூன்று தான். அவருடைய முதல் கதைத் தொகுப்பிலே (1855இல் வெளிவந்தது) இக்கதை இடம்பெற்றிருக்கிறது.
தான் இதை எழுத நேர்ந்தது பற்றி ஆசிரியர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். ஹெய்ஸேயும், இன்னொரு இலக்கிய நண்பரும் இத்தாலியில் ஸொரெண்டோவில் தங்கியிருக்கும்போது, ஒவ்வொரு இரவும் ஒரு கதையோ, காவியமோ, நாடகமோ எழுதுவது என்று சபதம் செய்துகொண்டார் - களாம் முதல் நாள் இரவு நண்பர் ஒரு காவியம் எழுதி வாசித்தார். ஹெய்ஸே 'காளி' என்ற இக்கதையை எழுதி வாசித்தாராம்.
ஸொரெண்டோவில் காலடி எடுத்து வைத்தபோது அதன் தெருவில் ஹெய்ஸே ஒரு பெண்ணைப் பார்த்தாராம் அவள் உருவமும், முகபாவமும் அவரை மிகவும் கவர்ந்தன. அவளைக் கதாநாயகியாக வைத்தே இக்கதையை எழுதினார் ஹெய்ஸே.
கதை இத்தாலியில் நடக்கிறது, எழுதியவர் ஒரு ஜெர்மானியன். இதன் தலைப்பு (மூலத்தில்) பிரெஞ்சுப் பாஷையில் அமைந்திருந்தது. ஆனால் இது வெளிவந்தபோதும் அதற்கப்புறமும் கதைகளில் ஈடுபாடுள்ளவர்களின் உள்ளங்களை எல்லாம் கவர்ந்துவிட்டது.