வாழ்க்கையை எவ்விதக் கையேடுகளோடும் ஒப்பிடாது, அதன் போக்கில் வாழும் ஒரு கூட்டத்தினரைக் கண்டு பொதுச் சமூகம் அச்சமடைகிறது. அவர்களைக் கண்டு விலகுகிறது அல்லது விலக்கி வைக்கிறது. அந்த விலக்கப்பட்ட மனிதர்களின் உலகம் இன்னொரு தனி உலகமாக உருக் கொள்கிறது. அதற்குள் நுழைந்து பார்க்கும்போது அது, சராசரிகளின் உலகத்தை விடவும் மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அந்தப் பேருலகையும் அதன் மனிதர்களையும் இந் நாவல் மிகத் துல்லியமாக நமக்கு அடையாளம் காட்டுகின்றது.
மனித வாழ்வில் காமமும் வன்முறையும் இரண்டறக் கலந்தவை. சிலர் இதை ஏற்றுக்கொண்டு இயல்பாக முன் நகர்கின்றனர். இன்னும் சிலர் ஏற்கெனவே சொல்லப்பட்டவற்றின் அடியொற்றி இதற்கு நேரெதிரானதைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்நாவல் முழுக்க வரும் ஆண்களும் பெண்களும் காமத்தையும் வன்முறையையும் எவ்விதப் பாசாங்குமில்லாமல் வெளிப்படுத்துகிறார்கள். சகலமும் ஒப்பனையின்றி, தயக்கமின்றி வெளிப்படுவதாலேயே இந்நாவல் மனித மனத்தின் ஆழத்தை அப்படியே தோலுரித்துக் காட்டுவதாய் அமைகிறது. ஆழ்மனத்தின் நிர்வாணம் என்ற ஒன்றிருக்குமானால், அதன் வெறிகொண்ட நடனமே இந்நாவல்.