சினிமா பின்னணியில் சினிமா போன்ற நாவல். ஒரு வெற்றிகரமான இயக்குநர் , உதவி இயக்குநர் மற்றும் சில நடிகைகள் உலாவும் இந்த நாவல் சினிமா பின்னணியில் இருந்தாலும் சினிமாவைத் தாண்டி செல்கிறது. சினிமா உலகம் என்றாலே மாய உலகம், உல்லாசமும் உற்சாகமும் நிறைந்த உலகம் என்பது பொதுவான எண்ணம். இதுவரை சினிமா உலகைப்பற்றி தமிழில் வெகு சில நாவல்களே வந்துள்ளன. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் சினிமா உலகையும் அதன் மாந்தர்களையும் வெகு அருகில் இருந்து காட்டியது .சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையும் ஒரு முக்கியமான ஆக்கம் .அராத்துவின் ஓப்பன் பண்ணா இந்த இரண்டு நாவல்களிலும் இருந்து முற்றிலும் விலகி வேறொரு தளத்தில் செயல்படுகிறது. தற்போதைய சினிமா உலகின் இயக்குநர்கள்,ஹீரோயின் , ஹீரோ , உதவி இயக்குநர் , தயாரிப்பாளர்கள் என தாவித்தாவிச் சுழல்ன்றாலும் , சினிமா உலகின் துறை சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் தராமல் அதில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளோடு இந்த நாவல் தானும் ஒரு கதாபாத்திரமாகப் பழகிப்பழகி வாசகர்கள் முன்னே படையல் போடுகிறது.உச்சகட்ட புகழில் இருக்கும் சினிமா கதாபாத்திரங்கள் எப்படி காதலை காமத்தை அணுகுகிறார்கள் ? அவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? திடீர் வீழ்ச்சிகளை எப்படிக் கடக்கிறார்கள் ? என்றெல்லாம் வெளிப்படைத் தன்மையோடு ஜாலியாக சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது. மது மாது மட்டுமே அதிகம் ஆக்கிரமித்து இருக்கும் சினிமா , ஃப்ரீ செக்ஸ் என்றெல்லாம் சினிமாவைப்பற்றி பொதுத்தளத்தில் பேசிக்கொண்டிருக்க , நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கேரக்டரே சினிமா உலகில் நுழைந்துப் பார்த்து வாசகர்களிடம் சொல்வது போலச் சொல்லிச் செல்வது இதன் சிறப்பு.
இதுவரை பயன்படுத்தி வந்த கதை சொல்லல் முறையை முற்றாக புறந்தள்ளி விட்டு , நவீன வாழ்க்கைக்கும் , நவீன சினிமாவிற்குமான புது விதமான கதை சொல்லும் பாணியில் பயணித்து வாசகர்கள் மூளைக்குப் புது ரத்தம் பாய்ச்சுகிறது. முற்றிலும் புதிதான , வெளிப்படைத்தனமை அதிகம் கொண்ட ஒரு அனுபவத்திற்குத் தயாராகலாம். pentopublish4 போட்டியில் பங்கு பெறும் இந்த நாவலை அராத்து araathu எழுதியிருக்கிறார்.