தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு மண்டலத்தின் யதார்த்தம் திரைப்படங்களில் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிலவும் சாதியின் கோரத்தன்மையை அதன் யதார்த்தத்துடன் பெருமாள் முருகனின் கதைகள் வழியாகவே நான் அதிகம் புரிந்துகொண்டேன்.‘வறுகறி', 'மாப்பு குடுக்கோணுஞ் சாமீ' ஆகிய கதைகளைத் திரைப்படமாக உருமாற்றியதில் பெருமாள் முருகனின் பங்கும் அளப்பரியது. சிறுகதைகளில் இடம்பெறும் உரையாடல்களை, விளக்கங்களை, மனிதர்களின் எண்ணவோட்டங்களைக் காட்சியாக மாற்றுவதென்பது சவாலானது.