மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இருக்கலாம். அங்கே நாமறியாத உயிர்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அல்லது வெறுமையும் இருளும் நிறைந்திருக்கலாம். அந்த எண்ணம் என்னை தூண்ட உடனே எழுத ஆரம்பித்த கதை இது. இந்தக்கதை நம்முள் உள்ள, நாம் மட்டுமே அறிந்த குகைவழிகளைப் பற்றியது.