பிறந்தது 1975ல், காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும்வார்த்தைகள், பாலகாண்டம், அ'னா ஆவன்னா, என்னைச் சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பாங்க் விருது பெற்றுள்ளார் திரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார், பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.