அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன் ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஒர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர் பிரசுரத்தை சொல்லலாம்