எறும்புகள் ஆறு கால் மனிதர்கள். மனித இனத்துக்கு மிக நெருக்கமான இனம் சிம்பன்சி அல்ல, எறும்புகள்தாம். உலகின் முதல் விவசாயி, முதல் நெசவாளி, முதற் பொறியாளர் மனிதர்களல்ல, அவையும் எறும்புகள்தாம். நமக்கு உணவு, உடை, இருப்பிட அவசியத்தைக் கற்றுத் தந்ததும் எறும்புகள்தாம். ஒரு மனிதருக்கு ஈடாக ஒன்றரைக் கோடி எறும்புகள் இவ்வுலகில் உள்ளன. தம் உடல் எடையை விட 50 மடங்கு எடையைச் சுமக்கக் கூடியவை எறும்புகள். மனிதரால் இருமடங்குதான் சுமக்க முடியும். இத்தகைய பெருமைமிக்க எறும்புகளையே நாம் கொன்றொழிக்கிறோம்.