இந்த முருகன் புனைந்த கதையன்று.. வாழ்ந்த வரலாறு. இந்நூலின் அச்சுப்பதிப்புகள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே திங்களிலும் 2019 ஆம் ஆண்டு சனவரி திங்களிலும் வெளியாகின. தன் தந்தை தர்மலிங்கம் அவர்களின் நினைவாக நடத்தும் தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இதன் அச்சு நூலைப் பதிப்பித்தார் என் தமிழண்ணன் த.மணிவண்ணன். இந்த முருகன் நம் தமிழ் இனத்துக்கானவன் என்ற நோக்கில் த.மணிவண்ணனே மின் நூலாக உலகத் தமிழர்களுக்குக் காணிக்கையாக்குகிறார். சமய, மத அடையாளங்கள் அழுக்குப்படுத்துவதற்கு முந்தைய மூத்த மூத்த காலத்தவன் தமிழ்முருகன். குறிஞ்சித் தமிழ்முருகனுக்குச் சந்தனமே குறியீடு! மற்றெல்லாம் தவறீடு! இனப்பிழை! இந்தக் கருத்துகளுக்குட்பட்டு, சங்க இலக்கியப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் முருகன் வரலாற்றை நினைவுறுத்துவதே இந்நூலின் மையப்பொருள். தமிழ் வாழ்க! தமிழினம் வாழ்க! தமிழ் முருகன் வாழ்க! -உங்கள்அறிவுமதி