"கோடிக்கணக்கான பிரச்னைகளாலும் மலிந்து விட்ட அதர்மத்தாலும் என்றைக்கோ இந்த உலகம் கடல்கொண்டு போகப்பட்டிருக்கவேண்டும். இழுத்துப் பிடித்து நிறுத்திவைத்திருப்பது கடவுள் இல்லை; பெண்கள்தான்." யாரோ ஒரு கேலண்டர் அறிஞர் சொல்லியிருந்தார். என்னென்ன காரணங்களால் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்று அறியமுடியவில்லை. ஆனால் இந்த ஒரு வரி மட்டும் என் நினைவில் நிலைத்துவிட்டது. சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் எத்தனை திறமையாக, எத்தனை அமைதியாக, எத்தனை சாதுர்யமாகப் பெண்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களால் முடியாத எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்று வியப்பு ஏற்படுவது நிச்சயம். அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானī