1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்து கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது கருத்துகளை ஒரு நாளிதழுக்காக 1867இல் எழுதினார். இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டும் அல்லாது குடுமி பற்றிய வரலாறு, அன்றைய சாதி நிலை, குடுமி சம்பந்தமான சடங்குகள், கிறிஸ்துவ சபையில் சாதியின் நிலை என பல விஷயங்களையும் விவாதித்து செல்கிறது. அன்றைய தமிழ் சமூகத்தின் - குறிப்பாக, தென் தமிழகத்தின் - ஒரு தோற்றமாகவும் இந்த கட்டுரை விரிகிறது. இதில் உள்ள இன்னுமொரு கட்டுரை கால்டுவெல் அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பட்டமளிப்பு உரை. அவர் அன்றைய இந்திய இளைஞர்களுக்கு கூறிய அறிவுரைகள் இன்றும் தேவை படுகின்றன என்பது வியப்பா அல்லது வேதனையா என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.