விக்ரமாதித்யனின் முதல் கவிதைத்தொகுதி. மஹாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 1982ல், கவிஞர் மீரா வெளியிட்ட நவகவிதை நூல் வரிசையில் ஒன்று இது. வெளியானபோது நகுலன், ஆர். சூடாமணி, தஞ்சை பிரகாஷ், இயக்குநர் ருத்ரய்யா, பிரம்மராஜன், ஈழக்கவிஞர் சேரன், தமிழவன் முதலானோரின் வரவேற்பைப் பெற்றது. மரபிலிருந்து நவீனத்துக்கு வந்த கவிஞனின் கவிதைகள். *** வாழ்க்கை பறத்தல் சந்தோஷமானது ஆனால் பட்டுப் பூச்சிகள் மல்பரி இலைகளில் தூங்கும் *** காரணம் “ஏன் தாடி வளர்க்கின்றாய்?” என்று கேட்கின்ற நண்பர்களே இழப்பதற்கும் வளர்ப்பதற்கும் வேறென்ன இருக்கிறது வேலையில்லா இளைஞனுக்கு? *** ஏகாதசி யாசகத்திற்கென்று ஏழெட்டு வீடுகள் சென்று