‘முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு’ என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது. மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது, உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று! இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர், அழிவு, கொடுங்கொலைகள், வதை எனப் பேசுகின்றன. நடந்த துயரங்களில் இரத்த சாட்சியங்கள். Sworn Statements. அறிவுஜீவிகள் சிலர் இந்தத்தொகுப்பின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு வரலாற்றுப் பிழைகளை ஆராயப்போவார்கள். சிலர் இதன் உருவம் எதனைச் சுட்டுகிறது என விஞ்ஞானமாக விரித்துப் பொருள் கூறுவார்கள். எந்தப் படைப்பையும் புரிந்துகொள்வதற்கு அறிவுமட்டும் போதாது. கலையுணர்வும் வேண்டும். கலையுணர்வு என்பது காசுக்கு எட்டு என விற்கப்படுவதும் அல்ல. - நாஞ்சில் நாடன்