இத்தொகுப்பிலுள்ள நாவல் பற்றியும் நான் சற்று சொல்லியாக வேண்டும். இவை மாத நாவல்களாக வெளிவந்தவை! மாத நாவல்கள் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. 'மாத நாவல்கள் ஒரு வெகுஜன சினிமா போன்றது. அதில் இலக்கியத் தரத்துக்கும், சமூக மேம்பாட்டுக்கும் இடமிருக்காது. எனவே அவைகளெல்லாம் இலக்கியத்தில் சருகுகளைப் போன்றவை' - என்பதுதான் அது! சில மாத நாவல்களை நான் படித்தபோது மேற்சொன்ன கருத்திற்கு நான் ஒத்துப்போனேன். 'அதெல்லாம் இல்லை. வேகமாய் வாசகனை சென்று சேரும் ஒரு எழுத்துதான் மாத நாவல்கள். ஆனால் 100 பக்கங்களுக்குள் விறுவிறுப்பாக ஒரு கதையை சொல்லி முடிக்கத் தெரியாதவர்கள் தான் மாத நாவல்கள் பற்றி இப்படிக் கூறுகின்றனர்' - என்றும் ஒரு கருத்து மாத நாவல்களுக்கு வக்காலத்து வாங்கியபடி என் காதில் விழுந்தது. இதிலும் உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதாவது என் வரையில் இருதரப்பு கருத்துகளிலுமே கொஞ்சம் போல் உண்மை இருப்பதை பார்க்கிறேன். நானும் இதுநாள் வரையில் கிட்டதட்ட 300க்கும் மேலான மாத நாவல்களை எழுதிவிட்டேன். மாத நாவல்களில் தொடர்கதை போல தொடர் நாவல்கள் எழுதியது அனேகமாக நான் மட்டுமே என்று நம்புகிறேன். பத்திரிகைகளிலும் இதுநாள் வரையில் 70 தொடர்கள் வெளிவந்துள்ளன. இதுபோக ஒரு பத்து மெகா நாவல்களையாவது நான் எழுதியிருப்பேன். ஆனால் நான் வெகுவாக அறியப் பெற்றது மாத நாவல்களில்தான். இந்த நாவல்கள் பதிப்பக புத்தகங்களாக வெளி வந்த போது முன்பை விட அதிக வரவேற்பைப் பெற்றன. இந்த தகவல்களை இப்போது நான் பகிர்ந்து கொள்ள காரணமிருக்கிறது. இத்தொகுப்பிலுள்ள இரு நாவல்களில் ஒன்று இப்போதும், இன்னொன்று 12 வருடத்துக்கு முன்பும் நான் எழுதியதாகும். கதை சொல்லும் விதத்தில் அது தெரிய வரும். 'Light Reading' என்று ஒரு வார்த்தை தற்போது புழக்கத்தில் உள்ளது என்றால் ‘Hard Reading' என்கிற ஒன்று இருக்கிறதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. என் வரையில் படிப்பதை இப்படி பிரிப்பதை ஏற்க முடியவில்லை. படிப்பது என்பது படிப்பதுதான். எப்படிப் படித்தால் என்ன? படிக்க வேண்டும். அதுதான் முக்கியம். அதிலும் தற்போது நடப்பது பார்க்கின்ற காலம். படிக்க விடாதபடி படிக்கத் தெரிந்தவர்களை தொலைக்காட்சிகள் இறுக்கிப் பிடித்தபடி உள்ளன. அவர்களை அதில் இருந்து விடுவித்து இந்தப் பக்கமாய் கொண்டு வர எல்லாவிதமான முயற்சிகளையும் versatile ஆக செய்வதில் தவறில்லை என்பது என் கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில் நான் எழுதி வரும் மாத நாவல்களில் இரண்டுதான் இதில் உள்ளது. எடுத்தால் கீழே வைக்கக்கூடாது என்பதுதான் என் தேவை. சிந்திக்க வைக்கவும் வேண்டும். இந்த நாவல்களும் அதைச் செய்யும் என நம்புகிறேன். அன்புடன்,