என்னுடைய புனைவுலகை வாசித்து அதன்வழியாக என்னைத் தொகுத்துக் கொண்டவர்கள் சிலர் "உங்கள் வாழ்வில் இழப்புக்களும் துயரங்களும் தான் இருக்கின்றனவா, மங்கலங்கள் இல்லையா" என்று கேட்பதுண்டு. பதிலாக ஒரு புன்னகையைப் பரிமாறுவேன். அவர்களுக்கு மங்கலம் வாய்க்கட்டும் என்று பிரார்த்திப்பேன். எவ்வளவு துயரத்தையும் அவலத்தையும் எழுதினாலும், எழுத்தாளன் மங்கலமானவன். என் வாழ்வு மங்கலத்தால் ஆசிர்வதிக்கப்பட்டது.
சொந்த நிலம் பாலித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன். என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன். செவியுள்ளோர் கேட்கட்டும். வாழ்வென்பது எழுத்தினால் அர்த்தமாகும் ஒரு சுடர்வெளி. அங்கு இருளிருந்தும் நிகழ்பவை எல்லாம் ஒளியின் அசைவே.