பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை. மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.