தமிழின் குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரான ராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதினை தனது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பிற்காக பெற்றவர். இந்நூல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வனத்தை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டது. சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் நடத்திய குறுநாவல் போட்டியில் ராஜவனம் முதல் பரிசு பெற்றது. விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 2021ம் ஆண்டிற்கான ‘கவிஞர் மீரா’ விருதும், படைப்பு இலக்கிய குழுமம் வழங்கும் 2021ம் ஆண்டிற்கான ‘படைப்பு இலக்கிய விருது’ம் பெற்றுள்ளது.