பாட்டையா வகை எழுத்து அபூர்வமானது, தமிழுக்குப் புதிய வரவு. தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்து, தமிழின் வேர்களை இழக்காது, பாட்டையா மாதிரி அரசியல், எழுத்து, சினிமா, நாடகம், பிரயாணம், கார்ப்பரேட் கல்ச்சர் ஆகியவற்றில் ஆழமான தன்னனுபவம் கொண்டவர் அரிது. அந்த அனுபவத்தை அவர் பாசாங்கு இல்லாமல், மிகவும் நேர்மையாகப் பதிவு செய்கிறார்.
- பி.கே. சிவகுமார், ஆசிரியர், ‘வார்த்தை’
சிலருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பார்கள். அது முற்றிலும் பாரதி மணிக்குத்தான் பொருந்தும். அவ்வளவு மனிதர்கள், அவ்வளவு சந்திப்புகள், அவ்வளவு பயணங்கள், அவ்வளவு பாடுகள் என அவ்வளவு பெரிய வாழ்க்கை ஒருவருக்கு வாய்ப்பது அபூர்வம். அது எல்லாமே அவரது சம்பாத்தியங்கள். ஆம், அவைதான் அவரது சம்பாத்தியங்கள். அது அவ்வளவும் இன்றைக்குத் தமிழ் வாசகனுக்கு அனுபவிக்கக் கிடைத்திருக்கிறது.