1846ல் ஜோதிபாவும் சாவித்திரியும் சேர்ந்து இந்தியாவில் முதல்பள்ளியைத் தொடங்கி கல்வி கற்பிக்கிறார்கள். முதல் பெண் ஆசிரியராக கல்வி கற்பிக்கிறார் சாவித்திரி. அனைவரையும் கல்வியில் நாட்டம் கொள்ளச்செய்ய புதிய புதிய திட்டங்களைத் தீட்டுகிறார் சாவித்திரி. 1852ல் மகிலா சேவா மண்டல் என்ற அமைப்பினை நிறுவி, பெண்கள் கல்விபெறுவதில் விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார்.
12வயதுவரை கட்டாயக் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கு கல்வியிலும், வேலையிலும் இடஒதுக்கீட்டு முன்னுரிமை, ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி பயில ஊக்க ஊதியம் என எத்தனை முற்போக்கான சிந்தனையை மேற்கொண்டுள்ளார்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. பெண்களுக்கு கல்வி கற்பிக்கச் செல்வதாலேயே, தன்மேல் தினமும் வீசப்படும் சேறு ,மலத்திலிருந்து தப்பிக்க, தன் கல்விப்பணியைத் தொடர மாற்று உடையுடன் பயணம் செய்தவர் சாவித்திரி. தன் கொள்கையிலிருந்து வாழ்நாள் முழுவதும் சிறிதும் தவறவில்லை. 1890களில் ப்ளேக் நோய் பரவியபோது 52 உணவகங்களை அப்பகுதி முழுவதும் திறந்துவைத்து உணவளித்தவர். பெண்கள் கணவனை இழந்தால் மொட்டையடிக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றிட, சவரத்தொழிலாளிகளை அழைத்து இனி அவ்வாறான கொடுமையை பெண்களுக்கு செய்யமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்கச் செய்திருக்கிறார் சாவித்திரி. சாவித்திரியின் இந்தப் புதுமையான, உறுதியான சிந்தனை தற்போதும் தேவைப்படுகிறது.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி கல்வி அளிப்பதும், சாதிவித்தியாசம் பாராமல் மனிதநேயத்துடன் மக்களுடன் இருப்பதையும் கொள்கையாகக் கொண்ட சமூகத் தந்தையும், தாயும் ஜோதிபாவும், சாவித்திரியும். முக்தாசால்வே, தாராபாய், ஃபாத்திமா என இந்தியாவின் கல்வி வரலாற்றில் முதலாவதாகப் பங்காற்றியவர்களின் வரலாறுகளை சுருக்கமாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். இந்நூல் ஓங்கில் கூட்டத்தின் வெளியீடாக, மாணவர்க்களின் கைககளில் மலர இருக்கிறது.
கல்வியின் முக்கியத்துவத்துடன், இந்தியாவில் முதன்முதலாய் கல்வித் தொண்டாற்றிய ஜோதிபா மற்றும் சாவித்திரியின் வரலாற்றை நுட்பமாகத் தந்திருக்கும் சாவித்திரியின் பள்ளி எனும் இந்நூல் மகத்தான நூல். குழந்தைகள் சார்ந்தே சிந்தித்து ஏராளமான பணியைச் செய்துகொண்டேயிருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு அவர்கள், இந்தப் புத்தகத்திற்காக கொடுத்திருக்கும் உழைப்பு முக்கியமானது. நூலின் செய்திகள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். வாழ்த்துகள்.