வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப்பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்பட்டதன்றி, “நீ யார் தம்பி?” என்று அச்சக் குரலும் கொடுத்த மலைமகளை முறுவல் விரிந்த முகத்துடன் நோக்கிய வாலிபன். “அண்ணி! நான் யாராயிருந்தாலென்ன? தற்சமயம் இந்த அண்ணனுக்குத் தம்பி! உங்களுக்குக் கொழுந்தன். மற்றதைப்பற்றி இப்பொழுதென்ன? நான் சொல்கிறபடி செய்யுங்கள்,” என்று கூறினான். அவன் அத்தனை திட்டமாகச் சொன்ன பேச்சைக் காதில் வாங்க மறுத்த மலைமகள் பெண் சுபாவத்தைக் காட்டத் தொடங்கி, “அப்படியில்லை தம்பி! நீ வந்த நாளாக உன் பெயரைச் சொல்லவில்லை. கேட்டதற்கு, 'தம்பி' என்று அழையுங்கள் அது