“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது...
வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில் தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும