இது செகோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளோ, அவரது மிகச் சிறந்த கதைகளோ அல்ல. அவரின் வேடிக்கையான கதைகள். உலகின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் செகோவ் கட்டாயம் இருப்பார். இந்த நூலின் முன்னுரையில் அதன் அமெரிக்க ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் அவரை அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றியுடன் ஒப்பிடுகின்றனர். இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒன்பது கதைகளும் ஏதோ ஒரு விதத்தில் மனிதர்களையும், நிகழ்வுகளையும் பகடி செய்கிறது. அவர்களின் நடத்தை, உணர்வுகள், சுயநலம் எனப் பலவற்றையும் மெலிதாகக் கேலி செய்தபடியே எழுதுகிறார். நாமும் இதில் இருப்பது போன்ற மனிதர்களைப் பார்த்திருப்போம். நிகழ்வுகளைச் சந்தித்திருப்போம். எதிர்பாராத வேடிக்கையாக நமது சிரமங்களில் வாழ்வு சிரித்திருக்கும். அதைத்தான் செகோவ் எழுதுகிறார்.