பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ்வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. “உன் மீதமர்ந்த பறவை” இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும் வாஞ்சையுடன் வெளிப்பட்டுக் கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன.
மென்மையான உணர்வுகளைச் சொற்களின் வார்ப்பிலிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநிபாரதி. இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை. கல்லூரிக் காதலர்களிடையே பரிமாறப்படும் மௌனங்களை மொழியாய் மாற்றிக் கவிதைகளாய்க் கடத்தியுள்ளார் பழநிபாரதி.
கவிதை நூலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், பழநிபாரதியின் திரைப்படப் பாடல் வரிகளைச் சிலாகித்துள்ளார். மேலும் எமிலி டிக்கின்ஸன், அன்னா அக்மாட்டோவோ ஆகிய உலகக் கவிஞர்களின் கவிதைகளுடன் பழநிபாரதியின் கவிதைகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார். பழநிபாரதி தன் கவிதைகளில் கையாண்டுள்ள உவமைகள் சங்க இலக்கியத்தில் காணப்படும் உவமைகளைப் போல பிரமிப்பூட்டுகின்றன என்கிறார்.
-தி இந்து தமிழ் திசை
இந்த மின்னூலில் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அணிந்துரை முழுதாகப் பின்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது..Read More