Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

ஊருக்குச் செல்லும் வழி: Oorukku Sellum Vazhi (Tamil Edition)

கார்த்திக் புகழேந்தி
4.00/5 (9 ratings)
ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது. வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்பியவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரே நேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்குச் செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் எழும்பிப் பறக்கின்றன. ஆனால், அவைகளுக்குச் சிறகுகள் மட்டுமல்ல சிலுவைகளும் உண்டு. கார்த்திக் புகழேந்தியை சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் அறியாதவர் இருக்க மாட்டார்கள். அவரின் சிறுகதைகள் தனது பிரதேசத் தன்மையை இழக்காத ஓர்மம் கொண்டவை. அந்தவகையில் நான் அவரைக் கொண்டாடுவேன். அவரைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்திருப்பேன். பேனாவும் காகிதமும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாய் ஆகிவிடலாம் என நம்புபவர்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சமூகத்தில் எழுத்தாளனாய் அறியப்பட்டவரின் கடந்தகாலமே “ஊருக்குச் செல்லும் வழியில் உலவிக் கொண்டிருக்கிறது. மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பிருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போலிருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகிற மீன்கள்போல அவரிடமிருக்கும் சொலவடைகள் அபாரமானது. புகழேந்தியிடம் கதைத்துக் கொண்டிருந்தால் ஆச்சியோ அப்புவோ நினைவுக்கு வந்துவிடுவார்கள். அது அவருக்கு வாழ்வளித்த கொடை.
Format:
Pages:
pages
Publication:
Publisher:
Edition:
2
Language:
ISBN10:
ISBN13:
kindle Asin:
B08D7D14WF