நான் எழுதிய நாவல்களில் நூறு சதவிகித முழுமையுள்ள படைப்பு இது என்று கூறுவேன். ஒரே மூச்சில் இதைப் படிப்பவர்கள் கொஞ்சம் இளகிய உள்ளம் படைத்தவர்களாக இருந்தால் - நிச்சயம் கதையின் முடிவில் கண்ணீர் விடுவார்கள். தெளிந்த நீரோடை போல எழுத்தோட்டம் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதில் அது இருக்கும். சினிமா துறை பற்றி கதையில் சொல்லப்படுவதால் அந்தத் துறை சார்ந்த 'ஜிகினா' வேலைகளை இதில் கொஞ்சம் சேர்த்தேன். எனக்கு எப்போதுமே விறுவிறுப்பு மிக முக்கியம். கூடவே சிந்திக்க வைப்பதும் மிகப் பிடித்த விஷயம். இக்கதைக்குள் சித்தர் பாத்திரம் ஒன்று, அந்த சிந்தனையை மிகவே தூண்டியுள்ளது. இது ஒரு குடும்பக் காவியம் - காதல் கதை - கொஞ்சம் மர்மக் கதையும்கூட...! இந்த மூன்றின் கலவையாக இதை எழுதி முடித்த நிலையில், தலைப்புக்காக கொஞ்சம் தவித்தேன். இறுதியாக 'அங்கே நான் நலமா?' என்று கொஞ்சம் கவிதை - கொஞ்சம் விடுகதையாக இந்த தலைப்பை தேர்வு செய்தேன். உங்களுக்கும் நிச்சயம் பிடித்திருக்கும். கதைக்குள் நுழையுங்கள்... என் 'ஹீரோ' உங்களை உருகி அழ வைக்க தயாராக இருக்கிறான்! நேசமுடன், இந்திரா சௌந்தர்ராஜன்.