சென்னையின் முக்கியப் பகுதியான குரோம்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தில் தலை தனியாக, முண்டம் தனியாக ஒரு சடலம் கிடக்கிறது. அந்த சடலம் கிடந்த ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் சிவப்பு மையினால் புதிதாக ஒரு குறியீடும் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைக் கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், இந்த சம்பவம் தற்கொலை அல்ல கொலை எனவும் இதுபோன்ற கொலைகள் தொடரும் எனவும் இன்ஸ்பெக்டர் ராகவேந்தரிடம் கூறுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் ராகவேந்தர் அகிலன் கூறியவற்றை மறுத்து தற்கொலை என கேஸை முடிக்கச் சொல்கிறார். அகிலன் கூறியது போலவே அடுத்தடுத்து அந்த பகுதிகளில் உடல்கள் சிதைக்கப்பட்ட கொடூர கொலைகள் நடக்கின்றன. சடலங்கள் கிடைத்த இடங்களில் தண்டவாள காம்பவுண்ட் சுவற்றில் இருந்த சிவப்பு மையினால் எழுதப்பட்ட குறியீடும் இருக்கிறது. இந்த கொலைகளை செய்தது யார், அந்த குறியீட்டின் பின்னணி என்ன என அகிலன் தன் கல்லூரித் தோழி 'டிடெக்டிவ் நவீனா' வுடன் சேர்ந்து கண்டறிந்து அடுத்து நடக்கவிருக்கும் கொலைகளை தடுக்க முயற்சிக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும் என விறுவிறுப்பாக நகரும் 'சஸ்பென்ஸ் த்ரில்லர்' நாவல்.