மனிதர்களை கவனமாக அணுகுகிறேன், உரையாடுகிறேன். ஒரு கதை சொல்லியாய் அவர்களின் வாதைகளை உள்வாங்கிக் கொள்ள விழைகிற போதெல்லாம் மனித மனங்களுக்கு வயது வேறுபாடுகளின்றி உடல் எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்து வருகிறது. இச்சையை இனப்பெருக்கத்திற்கான ஒரு தேவை என்கிற அளவில் மட்டுமே வாழ்வில் கடைபிடித்து வரும் நம் சமூகத்தில் அது உருவாக்கும் அகச்சிக்கல்களை கொந்தளிப்புகளைக் குறித்து உரையாடக்கூடிய ஒருவரை பொது சமூகமும் அவர்களை குளிர்விப்பதற்காக மட்டுமே இலக்கியம் படைப்பவர்களும் தீண்டத்தகாதவனாகவே பார்ப்பார்கள். ஜி.நாகராஜனை அவர் காலத்தின் சாதனை என்று அடையாளப்படுத்துகிறவர்கள்கூட தன் காலத்தின் பிசிறுகளை எழுதுகிறவர்களைப் பொருட்படுத்துவதில்லை. ஒரு எழுத்தாளன் தன் காலத்தில் கொண்டாடப்படாமல் போகலாம், ஆனால் வாசிக்கப்படாமல் போகக்கூடாது. இந்தக் கதைகள் வெளியானபோது எதிர்கொண்ட விமர்சனங்களும் கேள்விகளும் அனேகம். ரகசியத்தின் அரூப நிழல்கள் கதை சமீபத்திய வருடங்களில் அதிக சர்ச்சைகளை உருவாக்கின கதைகளில் ஒன்று. அந்தக் கதை எழுதியதற்காகவே சிலர் என்னுடனான நட்பை முறித்துக் கொண்டார்கள். அதே சமயம் எதிர்ப்பை மீறி பெருமளவில் அந்தக் கதை வாசிக்கப்பட்டதும் எனக்கு முக்கியமானது. போலவே, கம்பமத யானை சிறுகதையும் இப்படியாக அவளின் சில காதலர்கள் கதையும். ஒரு வகையில் இந்த மூன்று கதைகளுமே பெண்களின் இச்சைகளைக் குறித்தே பேசுகின்றன. இந்தக் கதைகளின் ஆண்கள் இந்தக் கதையில் உலவும் கதாப்பாத்திரங்கள் மட்டுந்தான். இந்தக் கதையின் உலகம், ஆதாரம் எல்லாமே பெண்கள் மட்டுமே. அதனாலேயே இந்தக் கதைகள் காமத்தை மையப்படுத்தி நான் எழுதிய மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. ஒரு சிறு இடைவெளிக்குப்பின் இன்னும் சொல்லப் போனால் நூலாக வடிவம் பெறுவதற்கு முன்பாகவே இந்தக் கதைகளை கிண்டிலில் வெளியிடுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.