அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரிக்கிறது இக்கதை. கதாநாயகி லலிதாவின் அப்பா, கான்வெண்டில், நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான சபேசனுக்குக் கொடுக்கிறார். சபேசன் பி.ஏ. படித்தவன். நில புலன்கள் உள்ளவன். கொஞ்சம்கூட டாம்பீகம் இல்லாதவன். குடி, சீட்டாட்டம், பிற பெண்களோடு பழக்கம் இல்லாதவன். ஆனால்? இந்த ‘ஆனால்?’ தான் ஆகாச வீடுகளின் அடித்தளம். அவர்களின் நிலை என்ன? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது? என்பதை வாசித்து அறியலாம்.