வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்!
சமூகம் சரித்திரம் அமானுஷ்யம் என்று எல்லா தளங்களிலும் இன்று நான் அறியப்பட்டிருந்தாலும் அமானுஷ்யம் கலந்த மர்மமான கதைகள் என்றால் என் பெயர் முதலில் அடிபடுவதைக் காணுகிறேன். வழக்கம் போலவே ஒவ்வொரு அத்தியாயமும் தொடர்கதைகளுக்கே உரிய பரபரப்புடன் அமைந்தது. இதன் முக்கிய கருப்பொருளாக நாக மாணிக்ககல் அமைந்தது. வாசகர்களும் விரும்பி வரவேற்றனர். கதை போகும் போக்கை வைத்து பலரும் இதை அமானுஷ்ய நாவலாகவே கருதினர். ஆனால் இதன் க்ளைமாக்ஸ் அதை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
இப்படி ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிற ரீதியில் விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் இது செயற்கையான முடிவல்ல - மிக அருமையான நம்பகமான முடிவ