கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறேன். எவ்வளவோ கதைகளை எழுதிவிட்டேன். சமூகம், சரித்திரம், மர்மம், ஆன்மீகம், அமானுஷ்யம் என்று எல்லா களங்களிலும் வலம் வந்திருக்கிறேன். இதில் சிலகாலங்களில் எனக்கு ராஜமுத்திரை விழுந்துள்ளது. கலைமகள் குறுநாவல் போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு, என்பெயர் ரங்கநாயகிக்கு தமிழக அரசின் விருது, கிருஷ்ண தாசி தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பெரும் வெற்றி பெற்ற தொடர் என்கிற அனேக அங்கீகாரங்கள் கிட்டியும் அமானுஷ்யத்தில் விழுந்த முத்திரை சமூக களத்தில் என் மேல் விழவில்லை. அப்படி ஒரு ஆதங்கத்தில் தான் இருந்த போது எழுதியதுதான் இந்த 'அனலாய்க் காயும் அம்புலிகள்' புதினம்.