நான் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் வாசகர். பிறகுதான் பல்சுவை நாவலின் ஆசிரியர் போன்ற பல்வேறு நிலைகள். படிப்பது என் விசாரம். அப்படித்தான் குங்குமத்தில் தொடர் கதையாக வெளியிடப்பட்ட கல்லூரிப் பூக்கள் என்ற நீண்ட நாவலையும் வாசித்தேன்.
கல்லூரிப் பூக்கள் சினிமா உலகம் சம்பந்தப்பட்ட நாவலாகியிருந்தாலும், அந்த உலகத்திலுள்ள தொழிற் சிக்கல்கள் மற்றும் தொழில் விபரங்கள் (Technic) பற்றிய விரிவு இருந்தாலும், அதில் வாழும் மனிதர்களின் போராட்டங்கள், மன உணர்வுகள், விகாரங்கள், ஏமாற்றங்கள், ஏமாற்றுக்கள், தகிடுத்ததங்கள், போலி ஆடம்பரங்கள் என்று சாதாரண உலகில் உலவும் அத்தனை நேர், எதிர் குணங்களின் பதிவுகளும் இதிலும் உண்டு என்பதை நாவல் படிக்க உணர முடிகிறது.