நாவல் என்ற கலை வடிவம் அதன் அளவில் அல்ல அமைப்பில்தான் உள்ளது என்று நிறுவிய புகழ்பெற்ற மலையாள நாவல் இது. கல்பற்றா நாராயணன் ஒரு இலக்கிய விமர்சகராகவும் அழகியல்வாதியாகவும் அறியப்பட்டவர். அதன்பின் தன்னை ஒரு கவிஞராக அறிந்துகொண்டார். கேரளத்தின் முதன்மையான கவிஞராக தன்னை நிறுவிய பின் அவர் இன்றைய கவிஞனுக்குரிய கலைவடிவம் நாவலே என்று கண்டுகொண்டார். அவரது முதல் நாவாலான இது முழுக்க முழுக்க ஒரு கவிஞன் எழுதியது. சொல்வதை விட உணர்த்த முயல்கிறது. நிகழ்ச்சிகளை விட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வயநாட்டின் குளிர்ந்த பச்சைக்காடுகள் வழியாக கிராமங்கள் வழியாக ஓடும் நீரோடை இது. - ஜெயமோகன்