1911 ம் ஆண்டு பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம் திருட்டு போனது. அந்த காணாமல் போன ஓவியத்தை மாட்டியிருந்த இடத்தை காணவே மக்களின் கூட்டம் அலைமோதியது. அந்த ஓவியத்தின் பெயரை கூறினால் நீங்கள் அவரின் பெயரை கூறிவிடுவீர்கள். அவர் ஓவியர் மட்டுமல்லாது, சிற்பி, தத்துவமேதை, பொறியாளர், இசை ஞானி போன்ற பத்திற்கும் மேற்பட்ட துறைகளில் நிபுணர். அந்த ஓவியத்தின் பெயர் மோனா லிசா, அவரின் பெயர் லியொனார்டோ டா வின்சி. அவர் பல துறைகளில் வல்லவராக இருந்த போதும், அவரின் பல முயற்சிகளை யாரும் மதிக்கவேயில்லை. அவர் வாழ்க்கையில் இறுதிக்காலம் வரை ஒரு நிலையான இடம் கிடைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தார். அவரின் கண்டுபிடுப்புகள், முயற்சிகளுக்கு ஏற்பட்ட மறுப்பினை மையமாக வைத்து இந்த புத்தகம் அமைகிறது.