தமிழர்களைச் சிரிக்க வைப்பது என்பது ஒரு நுண்கலை. சாலை மறியல்களையும் அரசியல் கூட்டங்களையும் மழைப் பற்றாக்குறையையும் மெகா சீரியல்களையும் பார்த்து நொந்து போயிருக்கும் ஜனங்களைச் சிரிக்க வைக்க கிரேஸி மோகன் போன்ற எழுத்தாளர்கள் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்மையாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகை கலாசாரத்தின், விளம்பரயுகத்தின் தாக்குதலால் எதையுமே இரண்டிலிருந்து பத்து மடங்காக்கி சொன்னால்தான் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு ஏற்ப கிரேஸி மோகனின் கட்டுரை நாயகனான கிச்சாவும் எச்சுமிப்பாட்டியும் மிகையான பல காரியங்கள் செய்கிறார்கள். வேர்ல்ட் கப்பில் இந்தியாவுக்குக் கூட ஆடுகிறார்கள். இவற்றைப் படித்துவிட்டு உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் போன ஜென்மத்தில் உங்களை ஒரு மூன்றெழுத்து வார்த்தையால்தான் வகைப்படுத்த முடியும். - சுஜாதா