இந்த நாவல் நான் செய்த வித்தியாசமான முயற்சிகளில் ஒன்று. விட்டுவிடு கருப்பாவை (விடாது கருப்பு) தொடர்ந்து நான் முயன்ற மற்றும் ஒரு கிராமத்து புதினம் இது.
ஓர் எழுத்தாளனை பொறுத்த அளவில் சில கருத்துக்கள் சில கருத்துக்கள் மட்டுமே அவனுக்குள் சொல்ல முடியாத அளவு ஒரு தன்னம்பிக்கையும் எழுதும் போது மிக மிக சுகமான உணர்ச்சியையும் அளிக்கும். என்வரையில் இந்த நாவலை அந்த லிஸ்டில் சேர்க்கலாம் எப்பொழுதும் ஓர் எழுத்தாளன் கதையை இழுக்கக் கூடாது. கதைத்தான் அவனை இழுக்க வேண்டும். இந்தக் கதையும் என்னை இழுத்தது. இதை இரண்டு பாகமாக எழுத நினைத்தேன். இது முதல் பாகம் தான். இரண்டாம் பாகம் எப்பொழுது என்னால் எழுதப்படும் என்பது எனக்கே தெரியாது. முதல் பாகம் கங்கை வெல்லமாய் பொங்கி புரண்டது.
இந்த கதையின் நாயகன் தேவமாயன். என் வரையில் ஒரு பரிபூரணன். அற்புதமான ஒரு பாத்திரப் படைப்பை உடையவன். தங்கமுத்து பாண்டியர் என்கிற பாத்திரமும் அப்படியேதான். 'ஒரு பானம் ஒரு சொல்' என்ற ஒரு பழமொழி உண்டு. மனிதன் சொல்லில் நிற்க வேண்டும். பேசியபடி நடக்க வேண்டும் என்பதெல்லாம் ஒவ்வொருவரும் வரவேற்றுப் போற்றும் ஓர் உன்னத விஷயமாகும். சொன்ன சொல்லில் நின்று காட்டுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல. அரிச்சந்திரன் கதை ஒன்று போதும் சொல்லில் நிற்க அவன் பட்ட பாட்டை உலகிற்கு உணர்த்த! ஆனால் நின்று விட்டாலும் அதன் பின் உலகம் எந்த நாளும் அவரை மறக்காது. இந்த கதையின் அடிநாதமும் இதுதான். எனக்கு மிக மன நிறைவை தந்த தொடர்களில் இதுவும் ஒன்று.
'குங்குமம்' வார இதழில் வெளிப்பட்டு எனக்கு சிறப்பு சேர்த்தது. வாசக உலகம் இது வரவேற்று சிறப்பிக்கும் என்பது எனக்கு சந்தேகம் இல்லை.