சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்விழிகளும் எரித்தன அந்த வாலிபனை நோக்கி. அதுவரை எந்த ஆடவன் கையும் படாததினால் அவள் வாளை விழிகளில் சுடர்விட்ட தீ அவள் உடலிலும் பரவி உணர்ச்சிகளில் ஊடுருவி உடலையும் எரித்துவிடுவது போன்ற நிலைமையை உண்டாக்கவே, அவள் நளின உடல் சற்று நடுங்கியது. அவள் முகத்தில் திடீரெனப் பாய்ந்துவிட்ட குருதி அதைக் குங்குமச் சிவப்பாக அடித்துவிட்டதால் அவள் நீள்விழிகளில் வெட்கமா பயமா கோபமாக என்று 'புரியாத சாயை ஒன்று படர்ந்தது. புரவியின் வயிற்றைக் கவ்வி நின்ற அவள் கால்கள் எதனாலோ சற்று தளர்ந்தன.