எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர். இளம்வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று நிரூபித்திருக்கும் - இலக்கியப் பித்துக்கு ஆட்பட்டுப் போனவர்.அவரது இளமைக்கால ஆவேசம் அவருடைய கனவின் ஒரு பகுதியைக்கூட நிறைவேற்றாமல் சிதைந்து போனதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?மனதார அவர் ஏற்ற பணிக்குச் செலவிட்ட காலத்தையும் உழைப்பையும்விட பிழைப்புக்காக கேவலப்பட்ட மனத்துடன் செலவிட நிர்பந்திக்கப்பட்ட காலமும் உழைப்பும் அதிகம்.எம்.வி.வி.யும் எவ்வளவோ நினைவுகளை நமக்குப் பதிவுசெய்து தந்திருக்கக்கூடியவர்தான். இன்னும் எவ்வளவோ படைப்புகளையும் தந்திருக்கக்கூடியவர்