இதுவரை வெளிவந்திருக்கும் சம்பத்தின் ஒரே புத்தகம் 'இடைவெளி' நாவல் மட்டுமே. 'தெறிகள்' என்ற காலாண்டிதழின் முதல் இதழில் இப்படைப்பு வெளியானது. வெளிவந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 'க்ரியா' அதைப் புத்தகமாக வெளியிட்டது. புத்தகத்தின் அச்சான சில பக்கங்களைக் கூட சம்பத் பார்த்துவிட்டிருந்தார். புத்தகம் பைண்டிங்கில் சில நாள் முடங்கிக் கிடந்தபோதுதான், சம்பத்தின் மரணச்செய்தி, இறந்து சில நாட்களுக்குப் பிறகு, வெளிப்பட்டது.
சாவு என்னும் அடிப்படைப் பிரச்சினையில் உழன்று அருமையான சில சிறுகதைகளையும் (சாமியார் ஜுவுக்குப் போகிறார், கோடுகள், இடைவெளி) படைத்த சம்பத்துக்கு திடீரென ஏற்பட்ட மூளை ரத்த நாளச் சேதம், இடைவெளியென இருப்பதாலேயே எவராலும் வெல்லப்பட முடியாத சாவு, அவரை அபகரிக்கக் காரணமாகிவிட்டது.
தமிழில் நவீன செவ்வியல் படைப்பு என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது இடைவெளி தான். பரந்த, பிரும்மாண்டமான தளமில்லை என்றாலும் சிறிய, ஆழமான, நுட்பமான நவீன படைப்பு, படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்து அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீன படைப்பாளி சம்பத்.
உலக நாவல் பரப்பில் நம் பங்களிப்பாக ஒரு நாவல் முன்வைக்கப்பட்டு ஏற்கப்படுமெனில் அது 'இடைவெளி' மட்டுமாகவே இருக்க முடியும். இது, சாவு என்பது என்ன என்ற அடிப்படைக் கேள்வியில் அலைக்கழிக்கப்படும் தினகரன் என்ற பாத்திரம் அதற்கான விடை தேடிச் செல்லும் நாவல். சம்பத்தின் சுயசரிதை அம்சங்கள் இப்படைப்பில் விரவிக் கிடக்கின்றன.Read More