கனவுகளோடு காத்திருந்து உதிர்ந்த பூக்களை கூட்டிப் பெருக்குகிறான் பூங்காத் தொழிலாளி பூக்களை அகற்றுகிற பரிதாபமோ பெருமிதமோ இரண்டுமற்ற அதிகாலை அவனுடையது களைத்த உடலாற்ற கல்லிருக்கையில் கால்நீட்டிப் படுத்திருக்கிறான் அவன்மீது மெதுவாக மிக மிக மிக மெதுவாக உதிர்ந்துகொண்டே இருக்கின்றன பூக்கள்