கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஆனால் இன்றோ? 47 நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை! ஏன்? அவசரம். நாகரிகத்தின் வேகம். வேகத்தில் சுகமும் ‘திரில்லும்’ உண்டு. ஆபத்தும் உண்டு. சாதாரண வழுக்குக்கே தீர விசாரிக்க வேண்டும். வாழ்க்கைக்கு வேண்டாமா? முன்பின் அறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும் முன் – நாளையும் பார்க்க வேண்டாமா? பாவம் விசாலி! கிராமத்தின் இனிய எளிய இயற்கையில் முகிழ்த்து இளம் குருத்து. பாரத மண்ணின் மணம். மாசுபடாத மனம்.
முதல் இரவில் குமாரிடம் கண்ட பண்பில் எத்தனை கோட்டைகளைக் கட்டுகிறாள்?! ஆகாயத்தில் பறக்கிறாள். கணுவு காண்கிறாள். விசாலியுடன் இந்த 47 நாட்களும் நாமும் பிரியாமல் வாழுகிறோம். அனுபவிக்கிறோம். ‘ஐயோ, என்ன பண்ணுவாள்’ என்று புலம்பி முடிவில் விடுதலை அடைகிறோம்.