2004 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி யாசிர் அர்ஃபாத் காலமான சமயத்தில் நிலமெல்லாம் ரத்தம் எழுதத் தொடங்கினேன். ஓராண்டுக்கும் மேலாகக் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து, பிறகு அது புத்தகமானது. இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னை குறித்துத் தமிழில் வெளியான முதல் நூல் என்று சொல்லப்பட்டது.
சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் ‘கணை ஏவு காலம்’ வெளியாகிறது. இது நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகம். இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம் முதல் 2023 ஆம் ஆண்டு தொடங்கிய ஹமாஸ்-இஸ்ரேல் போர் வரையிலான சம்பவங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்னை எப்போது தீரும் என்கிற வினாவுடன்தான் நிலமெல்லாம் ரத்தத்தை நிறைவு செய்ய வேண்டியிருந்தது.