கண்கள் இருட்டிக் கொண்டு வர ஆதாரமாய் மணவறையின் தூணைப் பிடித்துக் கொண்டாள் மதிவதனா. கை, கால்கள் நடுங்க, இதயம் பதற, கண்கள் கலங்கத் தயாரானது!'எத்தனை பெரிய ஏமாற்று இது? இரண்டு கால்களும் இல்லாத ஒரு முடவனையா எனக்கு கணவனாக்கினார் அப்பா? எப்படி? எப்படி ஏமாந்து போனேன்? நிச்சயதாம்பூலம் அன்று மாப்பிள்ளை வராததற்கு ஆயிரம் சமாதானம் சொன்ன போதே நான் சுதாரித்திருக்க வேண்டும். புகைப்படத்தை காட்டி என் வாயை அடைத்து விட்டாரே! எத்தனை கொடூரமான துரோகம் இது? என்னை ஏமாற்ற இந்த அப்பாவிற்கு எப்படி மனம் வந்தது? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எத்தனை பெரிய உண்மையை மறைத்து விட்டார்' கண்கள் பொங்க, தந்தையை தேடினாள். மகளை எதிர்கொள்ள தயங்கியே வந்தவர்களை உபசரிக்கப் புறப்&