'வந்தியத்தேவன் வாள்' சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் குணத்தை மறந்து அடக்கமாக நிலவொளியை உமிழும். இராசராச சோழனே பலமுறை அந்த வாளை எடுத்து, 'விர் விர்' என்று சுழற்றிப் பார்த்தும் முகத்துக்கு நேரே உயர்த்தியும் முத்தமிட்டு மகிழ்ந்தும், “வல்லவரையரே! தங்களுக்கு வெற்றி தருவது உங்கள் கரங்களா? கரங்களில் பூரணமாகத் திகழும் வாளா?” என்று கேட்டிருக்கிறான்.