பக்கத்தில் நின்ற மனிதர் தன்னை மல்லிநாதர் என்று சொல்லிக் கொண்டதுமே அதிர்ச்சியடைந்த சத்ருஞ்சயன், ராணாவுக்குப் பெண் பிடிக்க வந்திருக்கிறாயா என்று கேட்டதும் பிரமையின் உச்சியை எட்டிவிட்ட காரணத்தால் உணர்ச்சிகளை அடியோடு இழந்து நின்றான். அத்துடன் சற்று திரும்பி மல்லி நாதனையும் உற்று நோக்கினான். மல்லிநாதன் நல்ல ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்துக்கு மேல், வலிய உதடுகளில் கட்டு மீசையுடனும், தலையில் சற்று அதிகமாகவே நீண்டு தொங்கிய குழல்களுடனும் காட்சியளித்தார். அவருடைய உடலின் சிறுசிறு சதைப் பிடிப்பு காரணமாக அவர் உயரம் சரியாகத் தெரியா விட்டாலும் அவர் கழுத்தின் மேல்பகுதிகள் திரண்டு உருண்டு மாமிசப் பிடிப்புடன் இருந்ததாலும், அவருடைய அடர்ந்த கரிய புருவĨ