க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துடன் தனது தூதுப்பணியை நிறைவேற்றிய இதயசந்திரன், கவர்னர் கடைசியாக பானுதேவியின் பெயரை உச்சரித்ததும் அத்தனை நேரம் கையாண்ட எச்சரிக்கையை அடியோடு உதறி முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாட, “என்ன, பானுதேவியா! ஷாஹுவின் மருமகளா!” என்று வினவினான், அதிர்ச்சியின் பிரதிபலிப்பு குரலிலும் பூரணமாக துலங்க. கவர்னர் ஏஸ்லாபியின் உதடுகளில் புன்னகை விரிந்தது, கண்களில் விஷமம் சொட்டியது. “ஆம்” என்ற அவர் பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் தொனித்தன. இதயசந்திரன் உணர்ச்சிகள் கட்டுமீறிச் சென்றதால், “மகாராஷ்டிர அரச மகளிர் இத்தகைய நடன விருந்துகளுக்கு வரமுடியாதே. அது அரசகுல கட்டுப்பாட்டுக்கும் விரோதமாயிற்றே?” என்று கூறினான். கவர்னர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்திருந்து இதயசந்திரன் அருகில் வந்து அவனைச் சில விநாடிகள் உற்று நோக்கினார். பிறகு சற்றுச் சங்கடத்துடன் கூறினார். “இதயசந்திரா! சாதாரணமாக ஒரு கவர்னர் சொல்லக் கூடிய விஷயமல்ல இது; இருப்பினும் நீ பெரிய வீரன். ஒரு மகாவீரனின் தூதுவன் என்பதால் கூறுகிறேன்...” என்று. பிறகு கவர்னர் சற்று நிதானித்தார். “சொல்லுங்கள் பிரபு!” என்று கேட்டான் இதயசந்திரன் அவர் நிதானத்தைத் தாங்க முடியாதவனாய். “ஷாஹுவின் மருமகள் தனித்து வரவில்லை இந்த விருந்துக்கு...” என்று கூறி மறுபடியும் ஏதோ சிந்தித்தார். கவர்னர் தன்னிடமிருந்து எதையோ மறைக்கப் பிரியப்படுகிறார் என்பதை உணர்ந்த இதயசந்திரன், “கவர்னர் பிரபு! எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள், மறைக்க வேண்டாம்” என்று சற்று வலியுறுத்தி வினவினான். வினவிய 'குரலில் பணிவுமிருந்தது, கெஞ்சலுமிருந்தது. கெஞ்சலில் பெரும் சந்தேகமும் ஊடுருவிக் கிடந்தது. கவர்னர் அவன் உணர்ச்சிகளின் திருப்பம் எதையும் கவனிக்கத் தவறவில்லையென்றாலும், தான் கவனித்ததற்கு அறிகுறியாக முகத்திலோ பேச்சின் தோரணையிலோ எந்தவித மாறுபாட்டையும் காட்டாமல், “பானுதேவியுடன் இரண்டு தோழிகளும் வருகிறார்கள் விருந்துக்கு” என்றார். “அது இயற்கைதானே” என்றான் சற்று ஆசுவாசப் பெருமூச்சு விட்ட இதயசந்திரன். கவர்னர் தொடர்ந்தார், “அது இயற்கைதான். ஆனால் ஹிந்து மகளிர் வெள்ளைக்காரர் விருந்துக்கும் நடனத்துக்கும் வருவது அபூர்வம். எங்கள் நடன முறைக்கும் ஹிந்துக்களின் வாழ்க்கை நோக்குக்கும் வேறுபாடுகள் உண்டு. அதுவும் ஒரு ஹிந்து அரசகுல மகள் வெள்ளைக்காரர் விருந்துக்குப் போனாளென்றால் வதந்தி விரும்பத் தகாததாயிருக்கும். அப்படியிருக்க இந்த விருந்துக்கு பானுதேவி வர ஒப்புக்கொண்டது விசித்திரம். தோழிகள் உடன் வருவது சம்பிரதாயம். அதனால் சமுதாய ஆட்சேபணை அதிகமாக நீங்கிவிடா...”'. இந்த இடத்தில் சற்றுப் பேச்சை நிறுத்தினார் கவர்னர், தான் சொல்வதன் பொருள் தமிழன் இதயத்தில் நன்றாக உறைக்கட்டுமென்று. அவர் சொல்வதன் பொருள் முழுவதும் விளங்கிற்று இதயசந்திரனுக்கு. மன்னர் ஷாஹுவின் மருமகள் வெள்ளைக்காரர் விருந்துக்குச் சென்றாள் என்றாலே ஹிந்துஸ்தானத்தில் பெரும் அபவாதம் அவளுக்கு ஏற்பட்டுவிடும் என்பதை அவன் சந்தேகமற உணர்ந்தான். அத்தகைய அபவாதம் ஏற்படுமென்று கவர்னருக்குத் தெரிந்துமா கண்ணியவானான கவர்னர் அவளை விருந்துக்கழைத்தார் என்று சிந்தித்தான் கனோஜியின் உபதலைவன். அவர் அழைத்தாலும் இத்தகைய அபவாத அலுவலுக்கு பானுதேவி எப்படி ஒப்புக்கொண்டாள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவும் செய்தான் அவன். இத்தகைய சிந்தனை அவன் மனத்திலோடுவதைப் புரிந்துகொண்ட கவர்னர் கேட்டார்: “ஒரு பெண்ணுக்கு அபவாதம் விளையக்கூடிய செயலில் நான் ஏன் இறங்கினேன். எதற்காக அழைப்பு விடுத்தேன் என்று யோசிக்கிறாயா?” என்று. வியப்பு மண்டிய இதயசந்திரன் விழிகள் அவரை நோக்கி எழுந்தன. “ஆம் பிரபு! அதைத்தான் யோசிக்கிறேன்” என்று உதிர்த்தன சொற்களை அவன் உதடுகள். “நானாக அழைக்கவில்லை அரச மகளை. அவள் வேண்டுகோளின் மேல் அழைப்பு விடுத்தேன்” என்றொரு பெரு வெடியை எடுத்து வீசினார் ஏஸ்லாபி. “நீங்களாக அழைக்கவில்லையா?” இதயசந்திரன் கேள்வியில் வியப்பு இருந்தது