காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல் இன்றுவரை பதற்றம் குறையாத பகுதியாக இருக்கிறது காஷ்மீர். ஏன்? பாகிஸ்தான் தான் காரணமா? வேறு எந்தக் காரணமும் இல்லையா? தமிழில் முதல் முறையாக, காஷ்மீர் பிரச்னையின் அடி ஆழம் வரை அலசிப் பிழிந்து எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். சரித்திரம் முழுதும் ரத்தம். சகிக்க முடியாத பெரும் தலைவலி. நூற்றுக்கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டுவெடிப்புகள். உயிர்ப்பலி. ‘நாங்கள் இந்தியர்கள் இல்லை, பாகிஸ்தானிகளும் இல்லை; காஷ்மீரிகள்’ என்னும் கோஷம். பிரிவினைப் போராட்டங்கள். காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான்வசமும் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டமும் இல்லை?
எத்தனை யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகள்! இன்றுவரை காஷ்மீரில் உள்ள இமயம் பனி மலையாக அல்ல; எரிமலையாகவே இருக்கிறது. காஷ்மீர் என்பது உண்மை-யிலேயே தீர்க்க முடியாத பிரச்னைதானா?
Format:
Paperback
Pages:
143 pages
Publication:
2011
Publisher:
Kizhakku
Edition:
Language:
tam
ISBN10:
8184935765
ISBN13:
9788184935769
kindle Asin:
B07R6F9JRL
காஷ்மீர்: அரசியல் ஆயுத வரலாறு [Kashmir: Arasiyal - Aayudha Varalaru]